உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்லாம்பிரம்பு காளியம்மன் கோயிலில் ஆடி திருவிழாக்கள்

கல்லாம்பிரம்பு காளியம்மன் கோயிலில் ஆடி திருவிழாக்கள்

தேவகோட்டை, தேவகோட்டை அழகாபுரிநகர் கல்லாம்பிரம்பு காளியம்மன் கோயிலில் ஆடி விழா கடந்த 25 ந்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிேஷகம்,சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுசிறப்பு பூஜைகள் நடந்தன. 108 சங்காபிேஷகம், பெண்கள் விளக்கு பூஜை செய்தனர். பூத்தட்டு எடுத்து பூச்சொரிதல் நிகழ்ச்சியை நடத்தினர். நிறைவு நாளான நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பாலாபிேஷகம் செய்தனர்.

அருணகிரிபட்டினம் முத்துகாமாரியம்மன் ஆடி முளைப்பாரி திருவிழா கடந்த 25 ந்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து தினமும் இரவு அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு , மகாலட்சுமி, அன்னபூரணி உடபட சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !