மகாலிங்கசுவாமி கோயில் பொங்கல் விழா
ADDED :3314 days ago
திருவாடானை, திருவாடானை அருகே பாண்டுகுடி மகாலிங்கசுவாமி கோயில் திருவிழா ஜூலை 25 ல் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நடந்தது. கோயில் முன் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. வாண வேடிக்கையுடன் சுவாமி வீதி உலாவும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.