உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி முத்துவடுக நாதர் கோயிலில் அன்னதானம்

சிங்கம்புணரி முத்துவடுக நாதர் கோயிலில் அன்னதானம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. இங்குள்ள சித்தர் முத்துவடுக நாதர் கோயிலில் வணிகர்நலச் சங்கம், அன்னதான குழு சார்பாக அன்னதான விழா நடந்தது. காலை 9:00 மணிக்கு சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதான விழா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். பாரதி நகர் நொண்டி கருப்பர் கோயிலிலும் நடைபெற்ற விழாவில் கருப்பருக்கு சிறப்பு அன்னதான விழா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !