உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நேர்த்தியுடன் ஒரு நேர்த்திக்கடன்: உமி, மண் கலவையில் சிலைகள்

நேர்த்தியுடன் ஒரு நேர்த்திக்கடன்: உமி, மண் கலவையில் சிலைகள்

பாலமேடு: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மறவ பட்டியில் அய்யனார் கருப்புசாமி கோயில் முன் நெல் உமி, மண் கலவையில் நேர்த்திக்கடன் சுவாமி சிலைகளை அழகாக உருவாக்குகின்றனர். மறவர்பட்டி மற்றும் சுற்றியுள்ள 18 கிராமத்தினருக்கான நேர்த்திக்கடன் சுவாமி சிலைகள் செய்வதில் அழகர் செட்டியார், மகன் அழகு மணி பாரம்பரியமாக ஈடுபட்டு வருகின்றனர். மழை பெய்து பூமி செழிக்கவும், விவசாயிகள் வாழ்வாதாரம் பெருகவும் அய்யனார் கருப்புசாமியை மக்கள் வழிபடுகின்றனர். அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப அய்யனார், கருப்புசாமி, கன்னிமார் சுவாமி சிலைகளை பூஜாரிகளிடம் கூறி வடிவமைக்கின்றனர். சிலைகளை நெல் உமி, மண் கலவையில் கைகளால் தத்ரூபமாக உருவாக்குகின்றனர்.

நகைப்பெட்டி ஊர்வலம் அழகர் செட்டியார் கூறியதாவது:
ஆடி 19 ம் நாளை முன்னிட்டு பாலமேடு மஞ்சமலை ஆற்றுக்கு சுவாமி சிலைகளுடன் மறவர்பட்டி அய்யனார் கருப்புசாமி கோயிலில் இருந்து இன்று (ஆக.,4) மாலை 4:00 மணிக்கு ஊர்வலம் புறப்படு கிறது. இரவு 10:00 மணிக்கு பாலமேடு பாலமேடு வடக்கூர் கருப்பசாமி கம்பளி கவுண்டர் நகைப்பெட்டியுடன் மேலதாளம் முழங்க அழைத்து வரப்படுவார். பின் சுவாமி சிலைகளுக்கு கண் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !