முத்துமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3046 days ago
புதுச்சேரி: எல்லைபிள்ளைசாவடி முத்துமாரியம்மன் கோவி லில், அர்ஜுனன் - திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. எல்லைபிள்ளைச்சாவடி ஐயனாரப்பன், முத்து மாரியம்மன், திரவுபதியம்மன் கோவிலில், ஆடி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. 31ம் தேதி அரக்கு மாளிகை விழா, 1ம் தேதி பகாசூரனுக்கு சோறிடுதல் விழா, 2ம் தேதி இரவு 7.30 மணிக்கு, திரவுபதியம்மன், அர்ஜுணன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்தனர்.