/
கோயில்கள் செய்திகள் / கண்ணமங்கலம் ஆடி விழாவில் கையால் சுட்ட வடை ரூ.18,300 க்கு ஏலம் எடுத்த பக்தர்கள்
கண்ணமங்கலம் ஆடி விழாவில் கையால் சுட்ட வடை ரூ.18,300 க்கு ஏலம் எடுத்த பக்தர்கள்
ADDED :3093 days ago
கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே அம்மன் கோவிலில் ஆடி விழாவை ஒட்டி, வெறும் கையால் சுட்ட ஒன்பது வடைகள், 18 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் அருகே கன்னிகாபுரம் கிராமத்தில், சாந்தமாரி, நவசக்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடி பெருக்கு விழா, இரண்டு நாட்களாக நடந்தது. அம்மனுக்கு பூங்கரகம், பால் குடம் எடுத்தல், கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து, கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையுடன் வடை சுடும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த வடைகளை சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதன்படி, வெறும் கையால் சுட்ட ஒன்பது வடைகள் ஏலம் விடப்பட்டன.
முதல் வடை, 4,600 ரூபாய்; இரண்டாவது வடை, 4,500 ரூபாய; மூன்றாவது வடை, 3,200 ரூபாய் உட்பட ஒன்பது வடைகள், 18 ஆயிரத்து, 300 ரூபாய்க்கு ஏலம் போனது.