தூத்துக்குடி மாவட்டத்துக்கு (ஆக.,5) உள்ளூர் விடுமுறை
ADDED :3019 days ago
தூத்துக்குடி: தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 10ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, (ஆக.,5) தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற தூத்துக்குடி, தூய பனிமய மாதா பேராலய விழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் இன்று 10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். திருவிழாவை முன்னிட்டு, மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.