உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொம்மிடி தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பொம்மிடி தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பொம்மிடி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, கோவில் விழாவில், பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தத்தில் உள்ள, குருமன்ஸ் இன மக்கள் வீரபத்திர சுவாமியை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று, அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு வீரபத்திர சுவாமியை எடுத்து சென்று, சிறப்பு பூஜை செய்கின்றனர். மேலும், கத்தி கழுவுதல் என்னும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அடுத்த நாள் காலை தங்களது முன்னோர்களை வணங்கி, வீரபத்திர சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், பக்தர்கள் தங்களது தலையில், தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.நேற்று, வீரபத்திர சுவாமிக்கு தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 10:30 மணிக்கு கோவிலில் இருந்து வீரபத்திர சுவாமி உள்ளிட்ட சுவாமி சிலைகளை அப்பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கு ஊர்வலமாக மக்கள் எடுத்து வந்தனர். அங்கு, சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. பின், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.இதையடுத்து, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. மேலும், பக்தர்களுக்கு சாட்டையடி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !