உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தம்மம்பட்டி ஆடித்திருவிழா முன்னிட்டு தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு

தம்மம்பட்டி ஆடித்திருவிழா முன்னிட்டு தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு

தம்மம்பட்டி: ஆடித்திருவிழா முன்னிட்டு, பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் வழிபாடு நடந்தது. தம்மம்பட்டி அருகே, கொண்டையம்பள்ளி, வீரபத்ரசாமி கோவிலில், குரும்பர் இன மக்கள் சார்பில்,  ஆடித்திருவிழா நடந்தது. அதிகாலை, சர்வ அலங்காரத்தில் வீரபத்ரசாமி, அம்மன், முக்கிய வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, பக்தர்கள் நேர்த்திக்கடனாக, தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. வரிசையாக பக்தர்கள் அமர வைக்கப்பட்டு, பூசாரி, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய்களை உடைத்தார். வினோத வழிபாடு, பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும், தலையில் தேங்காய் உடைக்கும் போது, ஒரு பக்தருக்கு கூட, இதுவரை ரத்தம் வந்தது கிடையாது என, பக்தர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !