உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் 7ல் நடை அடைப்பு

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் 7ல் நடை அடைப்பு

ஓசூர்: ஓசூர், சந்திரசூடேஸ்வரர் கோவிலில், சந்திரகிரகணத்தை முன்னிட்டு, வரும், 7ல் நடை அடைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓசூர், தேர்ப்பேட்டை மலை மீது, பழமையான சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் உள்ளது. வாரந்தோறும் திங்கட்கிழமை மட்டும் அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். மற்ற ஆறு நாட்களில் காலை, 6:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம், 12:30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின் மாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு, 8:00 மணி வரை நடை திறந்திருக்கும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில், கூடுதலாக, 15 நிமிடம் முதல், அரை மணி நேரம் வரை நடை திறக்கப்படும். வரும், 7 ல் சந்திரகிரகணம் நிகழ்வதால், அன்று மதியம், 1:00 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு, 8 காலை, 6:30 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்படும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 7 மாலை, 4:30 முதல், 8:00 மணி வரை கோவில் நடை திறக்கப்படாது என்பதால், பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !