தர்மபுரி வரலட்சுமி நோன்பை முன்னிட்டு பெண்கள் சிறப்பு வழிபாடு
ADDED :3010 days ago
தர்மபுரி: தர்மபுரி, கோட்டை பரவாசுதேவர் கோவிலில் காலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பரவாசுதேவர் சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நெசவாளர் காலனி சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், ஆடி மாத வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடந்தன. இதேபோல், வரலட்சுமி பூஜையில், மாங்கல்ய வரம் வேண்டி, வீட்டில், வரலட்சுமி பூஜை செய்து வழிபட்டனர். பூஜையில், பெண்களை அழைத்து வழிபட்டு, அவர்களுக்கு வளையல் மற்றும் தாலி கயிறுகளை வழங்கினர். சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், மாங்கல்யம் நிலைத்து நிற்க வேண்டி திரளான பெண்கள், வரலட்சுமி நோன்பில் பங்கேற்றனர்.