வேதம் கற்க துவங்கும் நல்ல நாள்: இன்று ஆவணி அவிட்டம்
அவிட்ட நட்சத்திரமும் பவுர்ணமியும் சேரும் நன்னாளில் கடைபிடிக்கும் கூட்டு வழிபாடு ஆவணி அவிட்டம் வேதம் கற்க துவங்கும் நல்ல நாளான இன்ற ஆற்றங்கரையில் நீராடி ரிஷிகளுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வர். தந்தை இல்லாதவர்கள் முன்னோருக்கு எள்ளும் அரிசியும் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் புதிய பூணூல் அணிந்து கொண்டு வேதம் கற்க துவங்குவார். இதனை உபாகர்மா என குறிப்பிடுவார். இதற்கு தொடக்கம் என்பது பொருள்.மகாவிஷ்ணு பூலோகத்தில் பத்து அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலை நாட்டினார். அதில்வாமன அவதாரமும் ஒன்று. காஷ்யபர், அதிதி தம்பதிக்கு மகனாக அவதரித்த வாமனருக்கு சூரியனே உபநயனம்,என்னும் பூணூல் அணிவிக்கும் சடங்கை செய்தார். பகவானே பூணூல் அணிந்து கொண்டதன் மூலம் இதன் சிறப்பை உணரமுடியும். பூணூலை யக்ஞோபவீதம் என்று குறிப்பிடுவர். இதற்கு மிக புனிதமானது என்பது பொருள். பூணூல் அணிபவர்களும் அதனை தயாரிப்பவர்களும் ஒழுக்கத்தில் இருந்து சிறிதும் விலகுவது கூடாது. இன்றபூணூல் அணியும் இளைய தலை முறையினரும் இதன் சிறப்பை அறிந்து கொள்வது மிக அவசியம்.