சூளாங்குறிச்சியில் பால்குட ஊர்வலம்
ADDED :2994 days ago
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சியிலுள்ள தீப்பாஞ்சாலி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி காலனியில் உள்ள தீப்பாஞ்சாலி அம்மன் கோவிலில் முப்பூசை திருவிழா பால்குட ஊர்வலத்துடன் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சயையொட்டி காலை 11 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பால்குடம் மற்றும் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று நேத்தி கடனை செலுத்தினர். அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, திருவீதியுலா நடந்தது. இன்று(௭ம் தேதி) மதியம் ஊரணி பொங்கல் நிகழ்ச்சியை தொடர்ந்து முப்பூசை திருவிழா நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழாக்குழுவினர்கள் செய்துள்ளனர்.