பிள்ளையார்பட்டி சதுர்த்தி பெருவிழா
ADDED :2994 days ago
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, கற்பக விநாயகர் கோவிலில், சதுர்த்தி பெருவிழா ஆக., 16ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இந்த கோவிலில், சதுர்த்தி பெருவிழா, ஆக., 16ம் தேதி முதல், 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.தினமும், இரவில் பல்வேறு வாகனங்களில் விநாயகர், சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெறும். ஆறாம் திருநாளாக ஆக., 21 மாலை 5:00 மணிக்கு கஜமுகாசூர சம்ஹாரம், எட்டாம் திருநாளாக ஆக., 23 மாலை தேரோட்டமும், ஆண்டுக்கு ஒரு முறையாக சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியருளுதலும் நடைபெறும்.விநாயகர் சதுர்த்தியன்று நடக்கும், 10ம் திருநாளன்று, காலையில் கோவில் குளத்தில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவடையும்.