திருப்பரங்குன்றத்தில் 1008 விளக்கு பூஜை
ADDED :2994 days ago
திருப்பரங்குன்றம்: உலக நன்மை, திருமணமாகாத பெண்களுக்கு வரன் அமைய, மழை வேண்டியும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆக., 11 மாலை 6:00 மணிக்கு 1008 விளக்கு பூஜை நடக்கிறது. கோயில் உற்சவர் சன்னதி மற்றும் அனைத்து மண்டபங்களிலும் விளக்கு பூஜைகள் நடக்கும். பக்தர்கள் விளக்குகளுடன் வரவேண்டும். பூஜை பொருட்கள் வழங்கப்படும். ‘பங்கேற்க விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்’ என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
* மாணவர்கள் நலன், உலக நன்மைக்காக மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் ஆக., 11 காலை 9:௦௦ மணிக்கு மாணவியர் பங்கேற்கும் 1008 விளக்கு பூஜை நடக்கிறது. மாணவிகள் விளக்குகளுடன் வரவேண்டும். பூஜை பொருட்கள் வழங்கப்படும்.