உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திர கிரகணம்: தங்கக்கோவில் தரிசன நேரம் மாற்றம்

சந்திர கிரகணம்: தங்கக்கோவில் தரிசன நேரம் மாற்றம்

வேலூர்: சந்திர கிரகணம் இன்று நிகழ்வதால், தங்கக்கோவில் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது என, வேலூர், தங்கக்கோவில் மேலாளர் சம்பத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வேலூர் தங்கக்கோவில் தினமும் காலை, 8:00 மணியில் இருந்து இரவு, 8:00 மணி வரை நடை திறக்கப்பட்டிருக்கும். இன்று சந்திர கிரகணம் நிகழவிருப்பதால், மதியம், 3:30 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும், 8 காலை, 8:00 மணிக்கு நடை திறக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !