உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை பெய்ய வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்

மழை பெய்ய வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்

ஆத்தூர்: மழை வேண்டி, கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. ஆத்தூர், ராணிப்பேட்டையில், மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டு மன்றம் உள்ளது. அங்குள்ள ஆதிபராசக்தி சுவாமிக்கு, மன்றம் சார்பில், கடந்த, 4ல் பால் குட ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு வழிபாட்டு பூஜை நடந்தது. 10:00 மணிக்கு, மழை வேண்டி, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியாக, கஞ்சிக் கலய ஊர்வலம் சென்று, கோவிலை வந்தடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !