உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்தலசயன பெருமாள் பவித்ரோற்சவம் நிறைவு

ஸ்தலசயன பெருமாள் பவித்ரோற்சவம் நிறைவு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், மூன்று நாட்கள் பவித்ரோற்சவம் நிறைவுபெற்றது.இக்கோவிலில், கடந்த, 3ல், பவித்ரோற்சவம் துவங்கி, நேற்று முன்தினம்வரை நடைபெற்றது.முதல் நாளில், அங்குரார்ப்பணம், ஹோமம், பூர்ணாஹூதி; மறுநாள், சுவாமி, நிலமங்கை தாயார், பூதத்தாழ்வாருக்கு, 108 கலச அபிஷேகம், சுவாமி, தாயார், ஆண்டாள், ஆழ்வார்களுக்கு, பட்டுநுால் பவித்திரம் சாற்றப்பட்டது.இதையடுத்து, நேற்று முன்தினம் காலை, சுவாமிக்கு அபிஷேகம், திருமஞ்சனம், மாலை, பூர்ணாஹூதி வேதங்கள், நாலாயிர திவ்ய பிரபந்த சேவை என, சிறப்பு வழிபாட்டுடன், உற்சவம் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !