உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னத்தோட்டம் உற்சவ திருவிழா

சின்னத்தோட்டம் உற்சவ திருவிழா

வடமதுரை: கொம்பேரிபட்டி பெரியாற்றங்கரையோரம் அமைந்துள்ள சின்னத்தோட்டம் பாப்பாத்தியம்மன், மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் கோயில் உள்ளது. இதன் வருடாந்திர உற்சவ திருவிழா கடந்த ஜூலை 30ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. குளித்தலையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடங்களை பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் பொங்கல் வைத்து அபிஷேக, ஆராதனை நடந்தது. பல கிடாய்கள் வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கொம்பேரிபட்டி, வாலிசெட்டிபட்டி, புத்துார், மணியகாரன்பட்டி கிராமங்களை சேர்ந்த கோயில் பங்காளிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !