தென்பசியார் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2990 days ago
மயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் வீரன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. தென்பசியார் கிராம குளக்கரையில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட வீரபத்திர சுவாமி, மற்றும் நவகிரக கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நேற்று காலை 7 மணிக்கு நடந்தது. இதை முன்னிட்டு 5ம் தேதி மாலை 5 மணிக்கு கணபதி பூஜை, யாக சாலை வழிபாடு நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை வழிபாடு மகா தீபாரானை நடந்தது. தொடர்ந்து காலை 7 மணிக்கு கலசத்திற்கு சிவச்சாரியர்கள் புனித நீர் ஊற்றினார்கள். மதியம் 1 மணிக்கு கோவில் வாளகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.