செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் திவ்விய பிரபந்தம் நிறைவு விழா
செஞ்சி: செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் எட்டு நாள் நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி நிறைவு விழா நடந்தது. செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் பாகவதர் குழுவினர் கடந்த 29ம் தேதி முதல் ஆக. 5ம் தேதி வரை எட்டு நாட்களுக்கு நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி நடத்தினர். இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், மலர் அலங்காரமும் செய்தனர். உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து கோவில் உலா நடந்தது. காலை 10 மணி முதல் 2 மணிவரை பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டியினர் கலந்து கொண்டு நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரம் படித்தனர். செஞ்சி முன்னாள் சேர்மன் ரங்கநாதன், ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்லுாரி தாளாளர் வழக்கறிஞர் ரங்கபூபதி, கமலக்கன்னியம்மன் கோவில் தர்மகர்த்தா அரங்க ஏழுமலை, பெங்களூர் வழக்கறிஞர் ராமமூத்தி, வழக்கறிஞர் வைகை தமிழ், ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்லுாரி இயக்குநர் சாந்தி பூபதி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.