கைமேல் பலன் தருபவர்
ADDED :3048 days ago
அறிவு, ஆற்றலின் அடையாளமாக பிள்ளையார் விளங்குவதால் மேலான தலைவர் என்னும் பொருளில் விநாயகர் என அழைக்கிறோம். வழிபாட்டிலும் முதற்கடவுளாக சிறப்பிக்கிறோம். வளர்பிறை போலவே தேய்பிறை சதுர்த்தியும் அவருக்கு ஏற்றதாகும். இந்நாளில் சங்கடஹர சதுர்த்தி என்னும் பெயரில் சிறப்பு அபிஷேகம் நடக்கும். ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் தேய்பிறை சதுர்த்தி, மகாசங்கடஹர சதுர்த்தி (ஆக.11) எனப்படுகிறது. இந்நாளில் வழிபடுவோருக்கு கைமேல் நற்பலன் கிடைக்கும்.