சந்திர கிரகணம்: லட்சம் மடங்கு பலன் தரும் வழிபாடு!
சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று (ஆக., 7) ஏற்படுகிறது. இதை இந்தியாவில் பார்க்க முடியும். இந்திய நேரப்படி இன்று(ஆக.7) பின் இரவு 10.52 முதல் ஆரம்பித்து நாளை 8ம் தேதி முன் இரவு 12.48க்கு உச்சநிலை, 2.20க்கு முடிவு.
மலேசியா சிங்கப்பூர்நேரப்படி: 8ம் தேதி அதிகாலை 1.23 க்கு ஆரம்பித்து. அதிகாலை 2.21 ச்ட் உச்சநிலை, 08-08-2017 அதிகாலை 3.18 ச்ட் முடிவு.
திருவோணம் நட்சத்திரத்தில் சந்திரன் இருக்க கிரகணம் வருவதால் திருவோணம் நட்சத்திரகாரகள் மறுநாள் அதிகாலை குளித்து விட்டு சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்துவிட்டு உண்பது சிறப்பு. கிரகண காலத்தில் சந்திரனில் இருந்து வரும் கதிவீச்சு தற்காலிகமாக தடை செய்யப்படுவதால், வான் வெளியிலிருந்து வரும் தீய கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்கும். அதனால்தான் கிரகணம் அன்று நம்மை பாதுகாக்க சொன்னார்கள் நம் முன்னோர்கள். அறிவியல் அறிஞர்கள் முதலில் கதிர்வீச்சு வரும் எனும் விஷயத்தை மறுத்து வந்தார்கள் தற்சமயம் ஏற்றுக்கொண்டு அவர்களும் பாதுக்காப்பாக இருக்க பிரசாரம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
தர்ப்பை, கம்பளி போன்ற பொருட்களுக்கு மின்கடத்தா சக்தி உண்டு. மேலும் கதிர்வீச்சை அதிகமாக கடத்தாது. அதனால் அப்பொருட்களை வைத்து நம்மை தற்காத்துக் கொள்ள சாஸ்திரங்கள் கூறுகிறது. கிரகண காலத்தை ஒருவித பயத்துடன் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. இறைவன் எத்தகைய சூழலையும் நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வழிகாட்டுகிறார். அதன் அடிப்படையில் கிரகண காலத்தில் நமது உடல்-மனம்-ஆன்மா ஓன்றுபடுவதால் அன்று இறைவனை நாமத்தை ஜபம் செய்ய மிக சிறப்பான நாளாகும். மந்திர சாஸ்திரத்தில் ஜபம் செய்யும் காலத்தின் தன்மை எப்படி பலன் கொடுக்கிறது என்பதை கூறுகிறது. எல்லா நேரத்திலும் ஜபம் செய்தால் ஒருமடங்கு பலன், அதை சந்தியா காலத்தில் செய்தால் பத்து மடங்கும். பிரம்ம முஹூர்த்தத்தில் செய்தால் நூறு மடங்கும், பௌர்ணமி அமாவாசை நாளில் செய்தால் ஆயிரம் மடங்கும், கிரகண நாட்களில் செய்தால் லட்சம் மடங்கும் பலன் ஏற்படும் என கூறுகிறது.
ஒரு முறை மந்திரத்தை உச்சரித்தால் கிரகணத்தன்று லட்சம் முறை சொல்லுவதற்கு சமம். அன்றே லட்சம் முறை உச்சரித்தால் ? யோசிக்க வேண்டும். மந்திர சித்தி பெறுபவர்கள் இந்த நாளை பயன்படுத்தி தங்களின் மந்திரத்தில் சித்தியடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கிரகணத்தன்று வெளியுலக விஷயங்களை செய்யக் கூடாது. உங்கள் ஆன்மீக விஷயங்களுக்கு மட்டும் பயன் படுத்தலாம். முக்கியமாக கிரகண நேரத்தில் செய்ய கூடாதது என சொன்னால் உணவருந்துவது, உணவை சமைப்பது, மற்றும் உடலை வருத்தும் அனேக செயல்கள்.
செய்ய வேண்டியது பூஜை, தியானம், ஜபம் மற்றும் பித்ரு தர்ப்பணம்.
கிரகண சமயத்தில் கடைபிடிக்க வேண்டியவை:
* கிரகண நேரம் ஆரம்பிக்கும் பொழுதும் முடிந்த பிறகும் குளிக்கவும்.
* கிரகண நேரத்திற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்பு அல்லது பின்பு மட்டுமே உணவருந்த வேண்டும்.
* ஜீரண சக்திக்கு வேலை கொடுப்பதை தவிர்க்கவும்.
* தர்ப்பை வீட்டில் இருக்கும் நீர், தயிர் பொருட்கள், ஊறுகாய் போன்று கெட்டுப்போகும் பொருட்களில் இடவேண்டும்.
*சந்திரகிரகணம் என்பதால் கிரகணம் ஆரம்பிக்கும் சமயம் பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். சந்திரகிரகணத்தை கண்களால் பார்க்க கூடாது. நீரில் பிம்மம் விழ வைத்து பார்க்கலாம். கண் கண்ணாடி அணிந்து பார்ப்பதையும் தவிர்க்கவும்.
* கிரகண காலத்தில் தொடர்ந்து ஜபம் மற்றும் பாராயணம் செய்ய வேண்டும். வீண் பேச்சுக்கள் மற்றும் பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். பிரபஞ்சத்தில் நிகழும் எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்கும். எந்த ஒரு விஷயமும் காரண காரியம் இல்லாமல் நடைபெறாது. அது போல சந்திரகிரகணம் என்பது எதிர்காலத்தில் உலகில் நடக்க இருக்கும் சில சம்பவங்களை முன் கூறும் ஒரு நிகழ்வாக இருக்கிறது. உலகின் எந்த பகுதியில் கிரகணம் ஏற்படுகிறதோ அதற்கு நேர் எதிர்பகுதியில் இயற்கை சிற்றங்கள் நிகழும் என்கிறது சாஸ்த்திரம். இந்த வருடம் சந்திரகிரகணம் நம் நாட்டில் நடக்கிறது. இதற்கு எதிர் பூமி பகுதியில் இயற்கையின் சீற்றங்கள் நடைபெறலாம். அங்கே வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு நடக்காத வண்ணம் காக்க இறைவனை கிரகணத்தின் தினத்தில் வேண்டுவோம். அன்று வேண்டுவது லட்சம் மடங்கு பலன் அல்லவா?.
காலம் காலமா கிரகணத்தில் சாப்பிடவேண்டாம்,கர்பிணி பெண்கள் கிரகணத்தை பார்க்க கூடாது, குழந்தைக்கு உடல் ஊணம் ஏற்படும் என்பது நம்பிக்கை. முறை அறிந்தவர்கள் அந்த நேரத்தில் செய்யவேண்டிய ஜெப தியான பூசை முறைகளை பின்பற்றவும்.