உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடி திருவிழா தேரோட்டம்

தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடி திருவிழா தேரோட்டம்

திண்டுக்கல்: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடிப் திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது.ஜூலை 30 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் மற்றும் மாலையில் சுவாமி வீதியுலாவும் நடந்தது. நேற்று காலை தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை (ஆக.9) மாலை 6:00 மணிக்கு தெப்ப உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !