உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் ஆடித் தேரோட்டம் : பக்தர்கள் வடம் பிடித்து பரவசம்

அழகர்கோவில் ஆடித் தேரோட்டம் : பக்தர்கள் வடம் பிடித்து பரவசம்

அழகர்கோவில்: மதுரை அருகே அழகர்கோவில் கள்ளழகர் கோவில் ஆடிவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. காலை அலங்கரிக்கப்பட்ட தேருக்கு சுந்தரராஜப்பெருமாள் எழுந்தருளினார். காலை 9:00 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.கள்ளழகர் கோயில் ஆடி விழா ஜூலை 30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில், சுந்தரராஜபெருமாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார். மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது. முத்திரை பதிக்கும் ஆடித் தேரோட்டத்தை முன்னிட்டு மலர்கள், வெட்டி வேரால் தேர் அலங்கரிக்கப்பட்டது. நேற்று காலை 8:00 மணிக்கு திருத்தேருக்கு சுந்தரராஜபெருமாள் எழுந்தருளினார். கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேரோட்டம் நடந்தது. தேர் நிலைக்கு வந்த பின் மாலையில் பூப்பல்லக்கு நடந்தது. சந்திர கிரஹணம் முடிந்ததும் இரவு 1:00 மணிக்கு மேல் 18 ம்படி கருப்பண சுவாமிக்கு சந்தனம் சாத்துப்படி நடந்தது. தக்கார் வெங்கடாஜலம், செயல் அலுவலர் மாரிமுத்து விழா ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !