நிறைவடைந்தது அமர்நாத் யாத்திரை: 2.6 லட்சம் பக்தர்கள் வழிபாடு
ADDED :3042 days ago
ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்கும் இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை நேற்றுடன்(ஆக.,7) முடிவடைந்தது. இந்த ஆண்டு 2.6 லட்சம் பக்தர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். அமர்நாத் யாத்ரிகர்கள் சென்ற பஸ் மீது, சமீபத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் எட்டு பக்தர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.