உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லியம்பாக்கத்தில் மஹாவீரருக்கு கோவில்

வில்லியம்பாக்கத்தில் மஹாவீரருக்கு கோவில்

வில்லியம்பாக்கம்: வில்லியம்பாக்கத்தில், 1,500 ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படும், மஹா வீரர் சிலைக்கு, கோவில் கட்ட கிராம பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த, வில்லியம்பாக்கம் கிராமத்தின் வயல் வெளியில், புளிய மரம் ஒன்றின் அடியில், சமண மதத்தின், 24வது தீர்த்தங்கரர் மஹா வீரர் சிலை இருந்தது. இந்த சிலை, 1,500 ஆண்டுகளுக்கு முந்தையது என, கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை அஹிம்சை நடை என்ற குழுவினர், வில்லியம்பாக்கம் கிராமத்திற்கு நேற்று வந்தனர். புளிய மரத்தின் கீழிருந்த மஹா வீரர் சிலையை, கிராம பொதுமக்கள் உதவியுடன், இக்குழுவினர் எடுத்தனர். பின், அதே பகுதியில், பஜனை கோவில் வளாகத்தில், சிலைக்கு வழிபாடு செய்தனர். பின், மஹாவீரர் சிலையை பிரதிஷ்டை செய்து, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே கோவில் கட்ட முடிவு எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !