லட்சுமி ஹயக்ரீவருக்கு விசேஷ திருமஞ்சனம்
ADDED :2984 days ago
காஞ்சிபுரம்: திருவோணம் நட்சத்திரம், லட்சுமி ஹயக்ரீவர் ஜெயந்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீதுாப்புல் பரகால மடம், லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில், நேற்று விசேஷ திருமஞ்சனம் நடந்தது. காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில், ஸ்ரீதுாப்புல் பரகால மடம், லட்சுமி ஹயக்ரீவர் சன்னதி உள்ளது. திருவோண நட்சத்திம், லட்சுமி ஹயக்ரீவர் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று காலை, 8:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், துாபதீப ஆராதனையும், விசேஷ திருமஞ்சனமும் நடந்தது. இதில், ஏராளமான மாணவ, மாணவியர், பக்தர்கள் கலந்துகொண்டனர். நேற்று சந்திர கிரகணம் என்பதால், இன்று, உத்திராடம், திருவோணம், அவிட்டம், ரோஹிணி, அஸ்தம் நட்சத்திரம் கொண்டவர்கள், இன்று காலை, 9:00 மணிக்கு, அர்ச்சனை செய்து கொள்ளலாம் என, மடத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.