உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித செபஸ்தியார் திருவிழா: 850 ஆடு, 1,900 கோழிகளுடன் திண்டுக்கல்லில் மெகா விருந்து

புனித செபஸ்தியார் திருவிழா: 850 ஆடு, 1,900 கோழிகளுடன் திண்டுக்கல்லில் மெகா விருந்து

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் புனித செபஸ்தியார் திருவிழாவில், 1,900 கோழிகள், 850 ஆடுகளை சமைத்து, அனைத்து மதத்தினரும் பங்கேற்ற சமபந்தி விருந்து நடந்தது. திண்டுக்கல், முத்தழகு பட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. அனைத்து மதத்தினரும், காணிக்கையாக, 1,900 கோழிகள், 850 ஆடுகள், 130 மூட்டை அரிசி வழங்கினர். திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர், விழாவில் பங்கேற்றனர். நேற்று மாலை, 6:00 மணிக்கு புனிதரின் மன்றாட்டு ஜெபம், வேண்டுதல் பூஜை நடந்தது. பின், சமபந்தி விருந்து துவங்கியது. அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். நேற்று மாலை, 6:00 மணிக்கு துவங்கிய விருந்து, இன்று மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. இந்த விருந்துக்காக, 1,900 கோழி, 850 ஆடுகள் சமைக்கப்பட்டன. ஊர் சேர்வை பாக்கிய நாதன் கூறுகையில், ஊரில் உள்ள அனைவரும் பங்கேற்று, தன்னார்வ தொண்டர்களாக உணவு சமைப்பர். விருந்தில், அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். கடந்தாண்டை விட, இந்தாண்டு கோழிகள், ஆடுகள் அதிகளவில் காணிக்கையாக வந்தன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !