உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திர கிரகணத்தை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

சந்திர கிரகணத்தை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

திருவண்ணாமலை: சந்திர கிரகணத்தை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில், நள்ளிரவில் பிரம்ம தீர்த்தத்தில், தீர்த்தவாரி நடந்தது. இந்த மாத பவுர்ணமி, 6 இரவு, 11:31 மணிக்கு துவங்கி, நேற்று நள்ளிரவு, 12:02 மணிக்கு நிறைவடைந்தது. இதை முன்னிட்டு, கடந்த, இரண்டு நாட்களாக திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு, 10:52 மணிக்கு சந்திர கிரகணம் துவங்கி, நள்ளிரவு, 12:48 மணிக்கு நிறைவடைந்தது. அந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்வதை தவிர்த்தனர். தொடர்ந்து, சந்திர கிரகணம் முடிந்தவுடன், சந்திரகிரகண தோஷ நிவர்த்திக்காக, நேற்று அதிகாலை, 1:15 மணிக்கு, கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில், அஸ்திர தேவர் தீர்த்தவாரி நடந்தது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடை திறப்பு மற்றும் மூடும் நேரம், பூஜைகள் ஆகியவற்றில், எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !