உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் ஆவணித் திருவிழா: 12ம் தேதி கொடியேற்றம்

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா: 12ம் தேதி கொடியேற்றம்

மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா, வரும், 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.அன்று மாலை, அப்பர் சுவாமிகள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருள்வார். இரவு, அஸ்திரத்தேவருடன், கோவிலில் இருந்து, தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, ஒன்பது சன்னதிகளிலும் உலா வருவார்.ஆக., 18 காலை, 8:30 மணிக்கு, ஆறுமுகநயினார் சண்முக விலாசத்தில் இருந்து, வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருள்வார். மாலை, 4:30 மணிக்கு, தங்கசப்பரத்தில், சிவப்பு சாத்தி, சுவாமி எழுந்தருள்வார். 19ம் தேதி காலை, 10:30 மணிக்கு, பச்சை சாத்தி, சப்பரத்தில் சுவாமி ஆறுமுகநயினார் எழுந்தருள்வார்.ஆக., 21 காலை, 6:00 மணிக்கு, சிம்ம லக்னத்தில் தேரோட்டம் நடக்கும். விநாயகர், சுவாமி, அம்மன், தனித்தனி மரத்தேர்களில் ரத வீதிகளில் பவனி வருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !