உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை

முத்துமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை

மானாமதுரை: மானாமதுரை தயாபுரம் பஸ்ஸ்டாப் அருகில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டும் மழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காகவும் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிேஷகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. திருவிளக்கு பூஜையில் தயாபுரம், காட்டு உடைகுளம்,கணபதிநகர்,சிப்காட், மானாமதுரை பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் பூஜாரி சுப்பிரமணியன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !