கோட்டை மாரியம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். சேலத்தில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. ஆகம விதிக்கு எதிராக கோவிலில் திருப்பணி நடப்பதாக கூறி, பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இதனால் ஆடி திருவிழா நடக்குமா நடக்காதா என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஜூலை, 25 இரவு பூச்சாட்டுதல் விழாவுடன் ஆடித்திருவிழா தொடங்கியது. ஆக., 7ல் சக்தி அழைப்பு நடந்தது. நேற்று காலை, ஏராளமான பெண்கள் கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்தனர். பின்னர், புதுப்பானையில் பொங்கல் வைத்தனர். பிறகு மாவிளக்கு எடுத்து. அதை அம்மன் சன்னதியில் வைத்து வழிபாடு நடத்தினர். பிறகு பொங்கல், மாவிளக்கை பக்தர்களுக்கு வழங்கினர். வரும், 11 வரை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 30ல் பால்குட ஊர்வலம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன் ஆடி திருவிழா முடிவு பெறுகிறது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.