கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கூழ் ஊற்றும் திருவிழா
ADDED :2981 days ago
ஓசூர்: ஓசூர் அடுத்த பாகலூர் கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு, கூழ் ஊற்றும் திருவிழா நேற்று நடந்தது. ஓசூர் அடுத்த பாகலூர் கோட்டை வீதியில், 100 ஆண்டுகள் பழமையான கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா, ஆண்டுதோறும் தெலுங்கு வருட பிறப்பான உகாதியை முன்னிட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மார்ச் மாதம் முடிந்த நிலையில், ஆடி மாதத்தை முன்னிட்டு கூழ் ஊற்றும் திருவிழா நேற்று நடந்தது. பாகலூர் பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக, கூழ் பாத்திரத்தை தலையில் சுமந்து வந்த பெண் பக்தர்கள், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு கூழ் ஊற்றினர். அதைத்தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.