உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத நூறு கால் மண்டபத்தை சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

சேத நூறு கால் மண்டபத்தை சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

திருப்பாச்சூர்;திருப்பாச்சூர் வாசீஸ்வரர் சுவாமி கோவிலில், சேதமடைந்துள்ள நுாறு கால் மண்டபத்தை, சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூரில் அமைந்துள்ளது தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் சுவாமி கோவில். இந்த கோவிலில், 300 ஆண்டுகள் பழமையான நுாறு கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தான் கோவில் திருவிழா நாட்கள் மற்றும் ஆரூத்ரா விழாவில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். அதன்பின், சுவாமி வீதிஉலா சென்று, பின், கோவிலுக்கு திரும்பி வருவார். இந்நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன், இந்த நுாறு கால் மண்டபம் சேதம் அடைந்தது. இதை சீரமைக்க, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், கோவிலுக்கும் பக்தர்கள், 300 ஆண்டுகள் பழமையான இந்த நுாறு கால் மண்டபத்தை காண செல்கின்றனர். தற்போது, மிகவும் சேதமடைந்து, பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், இந்த மண்டபத்தை காண செல்லும் பக்தர்கள் ஆபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்து உள்ள நுாறு கால் மண்டபத்தை சீரமைத்து, இந்து சமய அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !