மானாமதுரை வீர அழகர் கோயிலில் தீர்த்தவாரி
ADDED :2981 days ago
மானாமதுரை: மானாமதுரை வீரஅழகர் கோயிலில் ஆடி பிரமோற்ஸவ விழா கடந்த 30ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அழகர்சாமி தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் வீதிவுலா வந்தார்.முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் கடந்த 6 ம் தேதியும்,தேரோட்டம்7 ம் தேதியும் நடந்தது.தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக நேற்று காலை பட்டத்தரசி கிராம மண்டகப்படிக்கு வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வீர அழகர் சுவாமி, மாலை 6:00 மணிக்கு நவத்தாவு அருகே உள்ள அலங்கார குளத்திற்கு எழுந்தருளிஅங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.