உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் 1,250 விநாயகர் சிலை பிரதிஷ்டை

திருப்பூரில் 1,250 விநாயகர் சிலை பிரதிஷ்டை

திருப்பூர் : இந்து முன்னணி சார்பில், திருப்பூர் நகரில், 1,250 சிலைகள் பிரதிஷ்டை செய்து, நான்கு நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னணியின், திருப்பூர் வடக்கு பகுதி, விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம், பாண்டியன் நகர் அலுவலகத்தில் நடந்தது. மாநில செயலாளர் கிஷோர் குமார் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். இதில், ‘விநாயகர் சதுர்த்தி விழாவில், திருப்பூர் மாநகரில், 1,250 சிலைகள் பிரதிஷ்டை செய்வது. வடக்கு பகுதியில், 450 இடங்களில் பிரதிஷ்டை செய்து, வரும், 25ம் தேதி முதல், 28ம் தேதி வரை, நான்கு நாட்கள், கலாச்சார போட்டிகள், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், திருவிளக்கு பூஜை, அன்னதானம் என ஆன்மீக நிகழ்ச்சிகளுடன், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது. ‘வரும், 28ல், விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர் வலம், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, சம்பத்குமார், கதிரவன், ஈஸ்வரன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். ஆலங்காட்டில் நடக்கும் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில், மாநில தலைவர் சுப்ரமணியம், அமைப்பாளர் பக்தன், சினிமா இயக்குனர் கஸ்தூரிராஜா ஆகியோர் பேசுவர்,’ என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், கோட்ட செயலாளர் சேவுகன், துறை தலைவர்கள் கதிர், சாமுண்டி, சர்வமலை, மோகன், முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !