உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளையார்கோவில் முத்துமாரியம்மன் கோயில் மது எடுப்பு விழா

காளையார்கோவில் முத்துமாரியம்மன் கோயில் மது எடுப்பு விழா

காளையார்கோவில்: காளையார்கோயில் கஸ்துாரிபாய் தெரு முத்துமாரியம்மன் கோயில் மது எடுப்பு விழா ஆக.1 ம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிப்பு அபிேஷகம், தீபாராதனைகளும் நடைபெற்று வந்தது. நேற்று பெண்கள் மதுக்குடம் எடுத்தனர். வாள் மேல்நடந்த அம்மன் கோயிலிலிருந்து முக்கியவீதிகள் வழியாக வந்து முத்துமாரியம்மன் கோயிலை சென்றடைந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. மதுக்குடம் கோயிலிருந்து எடுத்து ஊர்வலமாக பஸ் ஸ்டாண்ட் வழியாக அம்மன் குளத்தில் கரைத்து வந்தார்கள். ஏற்பாடுகளை கஸ்துாரிபாய் தெரு விழா குழுவினர் மற்றும் பொதுமக்களும் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !