உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்ன சத்திரங்கள் பல உள்ளன அன்னமிட தான் யாருமில்லை!

அன்ன சத்திரங்கள் பல உள்ளன அன்னமிட தான் யாருமில்லை!

பிள்ளைச்சத்திரம்: மன்னர் காலத்தில் இருந்த அன்னச்சத்திரங்கள் இன்னமும் நினைவிடமாக உள்ளன. ஆனால், அன்னமிட யாருக்கும் எண்ணமில்லை என, பேசப்படுகிறது. பயண நேரங்களில், வீரர்களின் பயணக்களைப்பை நீக்குவதற்கும், பசியாறி செல்வதற்கும், காஞ்சிபுரம் மாவட்டம், சின்னையன்சத்திரம், பிள்ளைச்சத்திரம், இடையார்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில், அன்னச்சத்திரங்கள் இயங்கின. அந்த இடங்கள் தற்போது, வெறும் காட்சிப்பொருளாக இருக்கின்றன. அந்த கட்டடங்களை, சமூக விரோத செயல்களுக்காக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். எனவே , சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அன்னசத்திரங்களை மீட்டு, பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !