ஜெய்பவானி அம்மன் கோவிலில் வாராஹி ஹோமம்
ADDED :2984 days ago
குன்னுார் : குன்னுார் உழவர் சந்தை அருகேயுள்ள ஜெய்பவானி அம்மன் கோவிலில், வாராஹி ஹோமம் நடத்தப்பட்டது. குன்னுார் ரேலி காம்பவுண்ட் சாலையில், உழவர் சந்தை அருகே உள்ள ஜெய்பவானி அம்மன் கோவிலில், 22வது ஆண்டு ஆடி திருவிழா நடந்தது. விழாவில், மகா கணபதி ஹோமம், சவுந்தர்ய லஹரிபூஜா மண்டலியினரின், சவுந்தர்யலஹரி பாராயணம் நடந்தது. தொடர்ந்து ஜெய் பவானி அம்மனுக்காக வாராஹி ஹோமம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிறுவர் சிறுமியர் கலை நிகழ்ச்சிகள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடந்தன. விழாவில், மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. கடலுார் குருமூர்த்தி குருக்கள் தரணி தரன் தலைமையில் பூஜைகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.