பொள்ளாச்சி காமாட்சியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி வழிபாடு
ADDED :2984 days ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த, கொண்டம்பட்டியிலுள்ள காமாட்சியம்மன் கோவிலில், ஆடி பவுர்ணமி வழிபாட்டில் குழந்தை அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கொண்டம்பட்டியில், 250 ஆண்டுகள் பழமையான காமாட்சியம்மன் கோவில் உள்ளது. வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடக்கிறது. ஆடி பவுர்ணமியை முன்னிட்டு, குழந்தை அலங்காரத்தில் காமாட்சியம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.