கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா
ADDED :2985 days ago
கடலுார்: கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று மத்ய ஆராதனை நடந்தது. அதனையொட்டி அதிகாலையில் சுப்ரபாதம், நிர்மால்யம், வேதபாராயணம் நடந்தது. காலை 9:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், ஹஸ்தோதகம், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (10ம் தேதி) மூன்றாம் நாள் உத்ர ஆராதனையுடன் விழா நிறைவு பெறுகிறது.