உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

திண்டுக்கல், திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. வேடப்பட்டி அருகே களிமண்ணில் விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனை செய்கின்றனர். அரை அடி முதல் 3 அடி வரை சிலைகள் தயார் செய்கின்றனர். இங்கிருந்து சேலம், உடுமலைப்பேட்டை, திருச்சிக்கு அதிகம் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இயற்கையான வண்ணங்கள் பூசி, ரூ.100 முதல் ரூ.500 வரைக்கும் விற்கின்றனர். தேவைக்கு ஏற்ப ஆர்டருக்கும் செய்து தருகின்றனர். இன்னும் 3 வாரங்களே இருப்பதால், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. வியாபாரி அய்யப்பன் கூறுகையில், தண்ணீர் பற்றாக்குறையால் விலைக்கு தண்ணீர் வாங்கி சிலைகள் செய்கிறோம். களிமண்ணால் செய்வதால் தண்ணீரில் கரைக்கையில் மாசு ஏற்படாது. மேலும், இயற்கை வண்ணங்களை மட்டுமே பயன்படுத்துகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !