உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேந்தமங்கலம் ராகவேந்திரா கோவிலில் 346 வது ஆராதனை விழா

சேந்தமங்கலம் ராகவேந்திரா கோவிலில் 346 வது ஆராதனை விழா

நாமக்கல்: சேந்தமங்கலம் அடுத்த, அக்கியம்பட்டியில், லஷ்மி நரசிம்ம சமேத ராகவேந்திரா கோவிலில், 346வது ஆராதனை விழா கொண்டாப்பட்டது. நேற்று காலை, மஹா பூஜையும், மங்களாராத்தியும், அலங்கதரம் பந்தியும் நடந்தது. கோவில் வளாகத்தில் தொடர்ந்து தீர்த்தப்ரசாதன், ஆராதனை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முன்னதாக, கோவில் வளாகத்தில் நாகபிரதிஷ்டை செய்து சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !