உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவனூர் முத்தாலம்மன், கற்பூர அம்மன், காளியம்மன் கோவிலில் தேர் திருவிழா

தேவனூர் முத்தாலம்மன், கற்பூர அம்மன், காளியம்மன் கோவிலில் தேர் திருவிழா

அவலுார்பேட்டை: தேவனுாரில் ஆடி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. மேல்மலையனூர் தாலுகா, தேவனூர் கிராமத்திலுள்ள முத்தாலம்மன், கற்பூர அம்மன், காளியம்மன் கோவிலில் ஆடி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த 4ம் தேதி துவங்கியது. தினசரி காலை மாலையில், பூங்கரக ஊர்வலம் நடந்தது. நேற்று மதியம் 3:15 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. மாடவீதி வழியாக கிராம பொதுமக்கள் ஊர்வலமாக தேரை இழுத்து வந்தனர். இதில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !