ஆத்துார் கோயில் விழா
ADDED :2985 days ago
ஆத்துார், ஆத்துாரில், மாலைப்பட்டி தெரு முனியப்பன், கருமாரியம்மன், கருப்பணசுவாமி கோயில் திருவிழா நடந்தது. சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், ஆற்றில் இருந்து அம்மன் கரகம் அழைப்பு, ஊர்வலம் நடந்தது. முனியப்பன், கருமாரியம்மன், கருப்பணசுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வழிபாடு, ஆடு வழங்கல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.