நாமக்கல் விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
ADDED :2982 days ago
நாமக்கல்: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தேய்பிறை சதுர்த்தியை, சங்கட ஹர சதுர்த்தியாக மக்கள் கொண்டாடுகின்றனர். இந்நாளில், அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று, பக்தர்கள் வழிபாடு செய்வர். நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நாமக்கல் பகுதி விநாயகர் கோவில்களில், காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில், சிறப்பு அபி?ஷகம் செய்து, சுவாமிக்கு வெள்ளிக்காப்பு சாற்றி தீபாராதனை செய்யப்பட்டது. அதேபோல், பிரதான சாலை, செங்கழநீர் விநாயகர் கோவிலில், கோட்டை பிள்ளையார், மோகனூர் சாலை கல்வி விநாயகர், சந்தைப்பேட்டைபுதூர் செல்வ விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.