சஞ்சீவிராயன்பேட்டையில் திருவிளக்கு பூஜை கோலாகலம்
ADDED :2979 days ago
சேலம்: சேலம், சீலநாயக்கன்ப்பட்டி அடுத்த சஞ்சீவிராயன்பேட்டையில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவிலில், ஆடிப்பண்டிகை, கடந்த, 25ல் பூச்சாட்டுதல் விழாவுடன் தொடங்கியது. நேற்று காலை, 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபி ?ஷகம், 8:00 மணிக்கு திருமஞ்சன ஊர்வலம் நடந்தது. மதியம், 2:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. அதில், திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் நடக்க வேண்டும்; திருமணமான பெண்கள், தங்கள் கணவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என, வழிபட்டனர். அவர்களுக்கு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. அதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதேபோல், காந்திநகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது.