அக்கராயபாளையத்தில் கோவில் தேர் திருவிழா
ADDED :2979 days ago
கச்சிராயபாளையம்: அக்கராயபாளையம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 4 ம் தேதி துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று பக்தர்கள் அலகு குத்துதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அக்னி கரகம் எடுத்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செய்தனர். முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித் தல் நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுதேரினை வடம்பிடித்து இழுத்தனர்.