ஆலமரத்தடி கண்ணன்
ADDED :2996 days ago
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவனத்தில் உள்ளது வம்சீவட் ஆலயம். கண்ணன் தனது புல்லாங்குழல் இசையால் கோபியரை கவர்ந்த இடம் இது. வம்சீ என்றால் புல்லாங்குழல். வட் என்றால் ஆலமரம். இங்கு அருள்பாலிக்கும் கண்ணனின் பெயர் வம்சீவட விஹாரி கண்ணன் பல வடிவங்கள் எடுத்து கோபியர்களுடன் லீலை புரிவதை சித்தரிக்கும் ஓவியங்களை இங்கு தரிசிக்கலாம். ராமானுஜர், மத்வர் ஆகியோருக்கு சன்னதி உள்ளது. மதுராவில் கிருஷ்ணன் அவதரித்த சிறைச்சாலையை ஒட்டி கத்ரகேஷப் தேவ் என்னும் பெயரில் கிருஷ்ணர், கோயில் கொண்டிருக்கிறார்